கோலாலம்பூர், ஜூலை.24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்து இருப்பதைப் போன்று இவ்வாண்டில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விரைந்து பணிக்கு அமர்த்தப்படுவதற்கு சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
மருத்துவர்களை அரசாங்கப் பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எஸ்பிஏ எனப்படும் பொதுச் சேவை ஆணையத்திடமிருந்து சுகாதார அமைச்சு கடிதம் பெற்று இருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கும், இதர மருத்துவ அதிகாரிகளுக்கும் தாங்கள் பிரத்தியேகமாகப் போராடி வருவது என்னவென்றால் அவர்கள் நிரந்தரப் பணியில் சேர்க்கப்பட வேண்டும். நிரந்தரமாகச் சுகாதார அமைச்சுடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கமாகும் என்று அமைச்சர் சுல்கிப்லி அஹ்மாட் விளக்கினார்.








