Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு

Share:

கூச்சிங், பிப்ரவரி.27-

சரவாக்கின் ஜுலாவ் பகுதியில் உள்ள ரூமா பாஞ்சாங் மினிஸ் எனும் நீண்ட வீட்டில், பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட 69 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

69 வயது Vincient Anak Belingau என்ற அந்த முதியவர், தனது வலது தோள்பட்டையில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக Nanga Entaih சுகாதார கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு காலை 11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை, செம்பனைத் தோட்டத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய 43 வயது மதிக்கத்தக்க பக்கத்து வீட்டுக்காரர், திடீரென தனது அறையிலிருந்து துப்பாக்கியுடன் ஓடி வந்து, முதியவரை நோக்கி ஒருமுறை சுட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஜுலாவ் மாவட்ட போலீஸ் தலைவர் Alif Haiqal Ramesh கூறுகையில், அருகில் இருந்த சாட்சி ஒருவர் துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த போது, முதியவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார். மற்றொரு அறையில் இருந்த முதியவரின் மகன், உடனடியாகத் தந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றிப் போனது.

இந்தச் சம்பவம் குறித்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் போலீசார் கைது செய்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று Alif Haiqal Ramesh கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்