நாட்டின் 60 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது விவசாயப் பல்கலைக்கழகமான UPM, தொடர்ந்து விவசாயப் பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர்.எம்.பி. ஒருவர், இன்று மக்களவையில் பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டின் தகவல், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஏற்ப விவசாயப் பல்கலைக்கழக அந்தஸ்திலிருந்து புத்ரா பல்லைக்கழகமாக அந்த விவசாயப் பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் கண்ட போதிலும் நாட்டின் வேளாண்மைத்துறை மேம்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை மாணவர் சமுதாயம் உணரவும், சிலாங்கூர் செர்டாங்கில் உள்ள யுனிவ்ர்சிட்டி பெர்தானியான் மலேசியா, தொடர்ந்து அந்தப் பெயரிலேயே செயல்பட வேண்டும் என்று பாசீர் கூடாங் எம்.பி.யான ஹாஸ்ஸான் காரிம் வலியுறுத்தியுள்ளார்.








