மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி முஹமட் ஸையின் தொடர்புடைய கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1 சம்பவம் குறித்து 25 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் கூறுகையில், சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளையும் போலீசார் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, பொதுமக்கள் பரவும் ஊகங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சம்பவத்தின்போது பயணக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட பணிகள் வழக்கமான உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளே என்றும், விதிமுறை மீறல் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை முடிந்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றும் காலிட் தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய இரு அதிகாரிகளும் தொடர்ந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.








