Dec 13, 2025
Thisaigal NewsYouTube
தைவான் பெண் கொலை: Namewee- க்கு ஜாமீன் தொடர்ந்து நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

தைவான் பெண் கொலை: Namewee- க்கு ஜாமீன் தொடர்ந்து நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தைவானைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான இளம் பெண் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹிப் ஹாப் இசைக் கலைஞரான Namewee- யின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இறந்து கிடந்த Hsieh Yu- hsin என்ற அந்தப் பெண் மரணம் தொடர்பில் விசாரணை அறிக்கை நிறைவுப் பெறுவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று அவர் சொன்னார்.

ரசாயன அறிக்கை கிடைக்கும் வரை, அந்தப் பாடகர் தொடர்ந்து ஜாமீனில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் நிகழும் போது, அந்த நபர், சம்பந்தப்ட்ட ஹோட்டல் அறையில் இருந்ததாக நம்பப்படுகிறது.

Related News