Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது

டிச. 20-

Daesh பயங்கரவாதக் கும்பலுக்குத் தொடர்புடையப் பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆடவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.


முன்னதா, கடந்த2017 இல் பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டின் பேரில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த 35 வயதான எல்டிங் தொழிலாளர் Muhammad Fesool Haron, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து சிறை தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டதாக Berita Harian நாளேடு தெரிவித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர் இன்று மீண்டும் குற்றச்சாட்டுகளை வாசித்தபோது தனது குற்ற ஒப்புதலை தக்க வைத்துக் கொண்ட பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி K Muniandy இந்த முடிவை எடுத்தார். அவர் தனது கைபேசியில் Daesh கும்பல் குழு தொடர்பான வீடியோக்களையும் ஸ்கிரீன் ஷாட்களையும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130 JB (1)(a) இன் கீழ் அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
வழக்கறிஞர் என் கன்மணி தனது கட்சிக்காரருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினார், ஏனெனில் அவர் குடும்பத்தை கவனித்து வருவதாகவும், மனம் திருந்திவிட்டதாகவும், அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததாகவும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →