கோலாலம்பூர், நவம்பர்.02-
மத்திய வங்கியான பேங்க் நெகாரா, வரும் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்க உள்ள ஒரே இரவு வட்டி கொள்கையான OPR, விகிதம் தொடர்பான முடிவு, அடுத்த வாரச் சந்தை இயக்கத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Bank Muamalat Malaysia Bhd வங்கி மலேசிய பெர்ஹாட்டின் தலைமை பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid கூறுகையில் ரிங்கிட் அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.18 முதல் 4.20 வரை வரம்பில் வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு, பேங்க் நெகாரா பொருளாதாரத்தை எவ்வாறு மதிப்பிடுகிறது, எதிர்கால நாணயக் கொள்கை நிலைப்பாட்டை அது எவ்வாறு வடிவமைக்கும் என்பதற்கான தெளிவை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.








