May 4, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

Share:

2025-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளானது, வரும் மார்ச் 31-ஆம் தேதி, காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்வாளர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிபட்ட முறையில் தேர்வு எழுதியவர்கள், அந்தந்த மாநில கல்வி இலாகாவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளிகள் மற்றும் தனியார் தேர்வர்கள் இருவருமே, தங்கள் தேர்வு முடிவுகளை myresultspm.moe.gov.my மூலமாக சரிபார்த்து, தங்கள் தேர்வு முடிவு சீட்டுகளையும் பெறலாம்.

மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளைப் பெற முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடெங்கிலும், 3,350 தேர்வு மையங்களில் மொத்தம் 4 லட்சத்து13 ஆயிரத்து 299 தேர்வாளர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News