குளுவாங், நவம்பர்.07-
சமூக ஊடகத்தில் அறிமுகமாகி, நட்பாகப் பழகிய ஒருவரால், தான் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானதாக ஜோகூரைச் சேர்ந்த தனித்து வாழும் தாய் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில், அந்த ஆடவருடன் தான் காரில் இருந்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குளுவாங் நகரில் இரண்டு இடங்களில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூலாயில் உள்ள தாமான் மேவா என்ற இடத்தில், அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக குளுவாங் மாவட்ட உதவி ஆணையர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம், பிரிவு 354 -இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முகமட் நோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.








