Oct 2, 2026
Thisaigal NewsYouTube

கேமரன் மலையில் நிலச்சரிவால் அடுக்குமாடிக் குடியிருப்பின் சாலை துண்டிப்பு - 700 குடியிருப்பாளர்களின் போக்குவரத்து பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேமரன் மலையில் நிலச்சரிவால் அடுக்குமாடிக் குடியிருப்பின் சாலை துண்டிப்பு - 700 குடியிருப்பாளர்களின் போக்குவரத்து பாதிப்பு

குவாந்தான், நவம்பர்.29-

கேமரன் மலை, தானா ராத்தாவிலுள்ள புஞ்சாக் அராபெல்லா அடுக்குமாடிக் குடியிருப்புக்கு செல்லும் சாலையானது நிலச்சரிவின் காரணமாக நேற்று துண்டிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் 700 குடியிருப்பாளர்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து, நேற்று இரவு 8.30 மணியளவில், போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ததோடு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளையில், அப்பகுதியில் மண்ணின் நிலைப்புத்தன்மையை மதிப்பிட உடனடியாக கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ரி ரம்லி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →