செர்டாங், நவம்பர்.07-
பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங்கில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் 6 இந்தியப் பிரஜைகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 19 ஆண்டு காலமாக மலேசியாவில் டெக்னிஷனாக சுயதொழில் செய்து வந்த 49 வயதுடைய வெளிநாட்டவர், நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது.
முக்கியச் சந்தேகப் பேர்வழி உட்பட பிடிபட்ட ஆறு இந்தியப் பிரஜைகளும் கொலை செய்யப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த புகார்தாரர் உட்பட நால்வரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா பதிவு மீட்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.








