ஷா ஆலாம், செப்டம்பர்.07-
சபாக் பெர்ணாமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியிலிருந்து 3-ஆம் படிவ மாணவன் மர்மமான முறையில் கீழே விழுந்த சம்பவம் குறித்த விசாரணையை காவற்படை நிறைவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், தங்கள் விசாரணை அறிக்கையை மாநில அரசு வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த ஆணைக்காக காவற்படையினர் காத்திருக்கின்றதாக சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸாலி காஹார் தெரிவித்தார்.
கீழே விழுந்த 15 வயது மாணவன், தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். அவனுடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








