சிறுவன் ஒருவன், எட்டி உதைக்கப்பட்டு, மரக்கட்டை ஒன்றினால் தாக்கப்படும் வீடியோ காணொளி ஒன்று, தற்போது சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வேளையில் அந்த சம்பவம் மலேசியாவில் நிகழவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த காணொளி, கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பயனர் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளி ஒன்றில் தங்கும் விடுதியில் நிகழ்ந்த பகடிவதையினால் மாணவன் தாக்கப்படுவதை அந்த காணொளி காட்சியின் மூலம் தெரியவந்த போதிலும் அச்சம்பவம் மலேசியாவில் நடக்கவில்லை என்று ஐஜிபி உறுதிபடுத்தியுள்ளார்.








