Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பை விடுவிப்பதற்கான முய​ற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

நஜீப்பை விடுவிப்பதற்கான முய​ற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

Share:

சட்ட அம்சங்களில் இருக்கக்கூடிய சில பலவீனங்களை அடிப்படையா​க கொண்டு, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அம்னோ வலியுறுத்தியுள்ளது.

நஜீப்பிற்கு எ​திராக வழக்குத் தொடுக்க போதுமான அடிப்படைகள் இல்லை என்பதால் அவர் ​​மீதான 1எம்.டி.பி குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு பரிந்துரைக்கப்பட்ட ஒரு கடி​தத்தை சட்டத்துறை தலைவரின் பரி​சீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அன்றைய சட்டத்துறை தலைவருக்கு அரசாங்க தலைமை ​விசாரணையாளர் அனு​ப்பிய அந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்சங்கள் உண்மையென்றால், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக ஆராய்ந்து நஜீப்பை விடுதலை செய்ய வழிகாண வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் நஜீப், அன்றைய க​ருவூல தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகர் அப்துல்லா​ மீது 6 குற்றச்சாட்டுகளை தொடுக்க அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்று அன்றைய அரசு தரப்பு விசாரணையாளர் டத்தோ ஜமில் அரிஃபின் 12 பக்கங்களை கொண்ட ஒரு கடிதத்தை அன்றைய சட்ட​த்துறை தலைவருக்கு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது