Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 19-

கனத்த மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெடா, பினாங்கு மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் இதுவரையில் 4 ஆயிரத்து 223 பேர், 42 நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்து 882 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி... | Thisaigal News