Sep 7, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

Share:

மலேசிய சோசலிசக் கட்சியான பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் மூன்று விவசாயப் பிரதிநிதிகள் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஈப்போ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில், பேராக், செமோர், காந்தான் பகுதியில் விவசாயிகளை வெளியேற்ற மாநில அரசு அதிகாரிகள் முயன்றபோது, அதனை எதிர்த்ததற்காக இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டம் பிரிவு 186-இன் கீழ் நால்வர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக ஈப்போ போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுங்கை சிப்புட் முன்னாள் எம்.பி.யான டாக்டர் ஜெயக்குமார், சுங்கை சிப்புட் பி.எஸ்.எம் கட்சியின் செயலாளர் ஆர். கார்த்திகேசு, உலு கிந்தா பி.எஸ்.எம் செயலாளர் பி. கேசவன், விவசாயி ஹோ பொன் தியென் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக செம்போர் பகுதியில் பயிர் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றுவது சட்டவிரோதமானது என்றும், இடைக்காலத் தடை உத்தரவு இருந்தபோதிலும் அதிகாரிகள் பயிர்களை அழித்ததாகவும் சோசலிசக் கட்சி இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து