கோத்தா திங்கி, ஆகஸ்ட்.09-
ஜோகூர், கோத்தா திங்கியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஓர் அந்நிய நாட்டவர் உட்பட இதர இரண்டு நபர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் ஜாலான் கூலாய்- கோத்தா திங்கி சாலையின் 28.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் உள்ளூரைச் சேர்ந்த 38 வயது நபர் உயிரிழந்தார்.
தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை சம்பந்தப்பட்ட நபர் மோதியதாக நம்பப்படுகிறது. மோதலுக்குப் பிறகு அந்த ஆடவர் தூக்கி எறியப்பட்டதில் சாலை நடுவே விழுந்தார். அப்போது வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அந்த நபரை மோதித் தள்ளியது. இதில் அந்நபர் சம்பவ இடத்ததிலேயே மாண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
காயமுற்ற ஓர் அந்நிய நாட்டவர் உட்பட இதர இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள், கோத்தா திங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








