Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பத்து கிலோ மீட்டர் தூரம் வரையில் நீடித்த வாகனப்போக்குவரத்து நெரிசல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்து கிலோ மீட்டர் தூரம் வரையில் நீடித்த வாகனப்போக்குவரத்து நெரிசல்

டிச.10-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 53.5 ஆவது கிலோமீட்டர், குளுவாங் அருகில் இரு லோரிகள் சம்பந்தபட்ட சாலை விபத்தில் இரு லோரிகளின் ஓட்டுநர்களும் கடும் காயங்களுடன் இடிபாடுகளில் சிக்சிக்கிக்கொண்டனர்.
இன்று நிகழ்ந்த இவ்விபத்தில் இரு லோரி ஓட்டுநர்களையும் மீட்கும் நடவடிக்கையில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தின் காரணமாக இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகனங்களின் போக்குவரத்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை நிலைக்குத்தியது.

இரு கனரக வாகனங்களும் சாலையை மறித்துக்கொண்டன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த சாலையை பயன்படுத்திய வாகனமோட்டிகள் பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →