Dec 2, 2025
Thisaigal NewsYouTube
12 வயது சிறுவன் வெப்ப பக்கவதத்தால் இறக்கவில்லை ஜோகூர் சுகாதார இலாக்கா விளக்கம்
தற்போதைய செய்திகள்

12 வயது சிறுவன் வெப்ப பக்கவதத்தால் இறக்கவில்லை ஜோகூர் சுகாதார இலாக்கா விளக்கம்

Share:

நேற்று ஜொகூர் குளுவாங் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வெப்ப பக்கவதத்தினால் மரணமுற்றான் என்ற செய்தியில் உண்மை இல்லை என ஜோகூர் மாநில சுகதார இலாக்காவின் இயக்குனர் டாக்டர் மொக்தார் புங்குட் தனது ஜொகூர் சுகாதார இலாக்காவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளார்.

அந்த 12 வயது சிறுவன் 'Septic Shock ஸ்econdary to Meningoencephalitis' எனப்படும் மூளையில் ஏற்பட்ட கிருமிகள் உடல் முழுவதும் பரவி அதனால் பக்கவாதம் ஏற்பட்டு இறந்தார் என டாக்டர் மொக்தார் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த சிறுவன் இறப்பதற்கு முதல் நாள் , மூன்று நாள் தொடர்ந்து இரும்பல் ஏற்பட்டு வழுப்பு வந்தப்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பிறகு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் என தெளிவுப்படுத்தினார்.

நேற்று காலையில் தன் மகன் இறந்தபின், அவரின் தந்தையார் வெப்ப பக்கவாததினால் தன் மகன் இறந்து விட்டதாக செய்யாளர்களிடம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related News