May 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கத்துறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

சுங்கத்துறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜுன் 27-

நபர் ஒருவருக்கு சொந்தமான CZ துப்பாக்கியை பயன்படுத்தி சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பினாங்கு, மலேசிய சுங்கத்துறை அதிகாரியின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை செபரங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்திருப்பதாக பினாங்கு, போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

அதில், அந்த துப்பாக்கியை சோதனையிடுவதற்கு முயற்சித்து தவறுதலாக அதனை கையாண்ட வேளை அதிலிருந்த தோட்டாக்கள் தனக்கு ஆபத்தாக வந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, இதுவரையில் மொத்தம் நான்கு பேருடைய சாட்சியங்களை போலீசார் பதிவு செய்திருப்பதாகஹம்சா அஹ்மத் விளக்கினார்.

Related News