கோம்பாக், டிசம்பர்.26-
தனது நண்பர், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதால் தாம் லோரியைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இந்தியப் பிரஜை ஒருவர் கூறிய காரணத்தை சாலை போக்குவரத்து இலாகான ஜேபிஜே நிராகரித்தது.
லைசென்ஸின்றி நேற்று வியாழக்கிழமை லோரியைச் செலுத்தி ஓர் இந்தியப் பிரஜை ஜேபிஜே அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வாகனமோட்டும் உரிமமின்றி லோரியை செலுத்தியதற்கான காரணத்தை வினவப்பட்ட போது சம்பந்தப்பட்ட அந்நியப் பிரஜை மேற்கண்ட காணரத்தை கூறியதாக சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
32 வயதுடையை அந்த இந்தியப் பிரஜை நேற்று இரவு 8.15 மணியளவில் பத்துகேவ்ஸ், ஜாலான் 2- வில் ஜேபிஜே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








