Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வழக்கு தொடுப்பதற்கு லிம் கிட் சியாங் முடிவு
தற்போதைய செய்திகள்

வழக்கு தொடுப்பதற்கு லிம் கிட் சியாங் முடிவு

Share:

பினாங்கு, கெபாலா பாத்தாஸ், பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிதி மஸ்துரா முஹமாட்டிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கும், லிம் கிட் சியாங்கும் சிற்றப்பா, பெரியப்பா பிள்ளைகள் என்று கூறியிருக்கும் சித்தி மஸ்துரா விற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுக்கவிருப்பதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஒரு செராமாவில் சித்தி மஸ்துரா ஆற்றிய உரையில் தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று இஸ்கன்டார் புத்தெரி முன்னாள் எம்.பி.யுமான லிம் கிட் சியாங் தெளிவுபடுத்தினார்.

Related News