Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஸாகாட் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பினாங்கு துணை முதல்வரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஸாகாட் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பினாங்கு துணை முதல்வரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.02-

ஸாகாட் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, பினாங்கு துணை முதல்வர் முஹமட் அப்துல் ஹாமிட், ஜார்ஜ்டவுனில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு இன்று காலை வருகை புரிந்தார்.

பினாங்கு இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவரான முஹமட் அப்துல் ஹாமிட், நிலம் வாங்கியது தொடர்பில், மூத்த அதிகாரி ஒருவர், ஸாகாட் நிதியில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமது தரப்பு வாக்குமூலத்தை அளிக்கவுள்ளார்.

முன்னதாக, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக, பல அலுவலகங்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதனிடையே, ஸாகாட் நிதி குறித்த அனைத்து ஆவணங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் முஹமட் அப்துல் ஹாமிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு