Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஹாமாஸ் தலைவருடான சந்திப்பைத் தற்காத்து பேசிய பிரதமர் அன்வார்.
தற்போதைய செய்திகள்

ஹாமாஸ் தலைவருடான சந்திப்பைத் தற்காத்து பேசிய பிரதமர் அன்வார்.

Share:

டோக்கியோ, மே 23-

அண்மையில் கத்தாருக்கு மேற்கொண்டிருந்த அதிகாரத்துவ பயணத்தில், ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே-வை தாம் சந்தித்து பேசியிருந்ததை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து பேசியுள்ளார்.

தாமும் இஸ்மாயில் ஹனியே-வும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்துவரும் சூழலில், அவரை சந்திக்கக்கூடாது என்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என NIKKEI அனைத்துலக மாநாட்டில் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் கலந்துக்கொண்டு பேசிய போது பிரதமர் கூறினார்.

இஸ்மாயில் ஹனியே உடனான சந்திப்பில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமைதியும் தீர்வும் ஏற்பட, அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படும்படி தாம் கேட்டுக்கொண்டதாக கூறிய பிரதமர், தாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றார்.

இதற்குமுன்பு, ஹாமாஸ் -சுக்கு மலேசியா வழியாக நிதி அனுப்பப்படுவதாக கூறப்பட்ட சூழலில், ஹாமாஸ் -சின் அரசியல் பிரிவு தலைவரான அவரை் தாம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டிருந்ததை, பிரதமர் ஒப்புக்கொண்டிருந்தார்.

இருப்பினும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனையில் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும் அவர் கூறியிருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து