சிலாங்கூர் தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள தாமான் பத்து உந்தோங்கில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கோபுர கலசத்தை இன்று அதிகாலை பெய்த கனத்த மழையில் மின்னல் தாக்கி கடுமையாக சேதமுற்றது.
அதிகாலை 2-30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கோபுர கலசத்தின் உடைந்த சிதறல்கள், ஆலய வளாகத்தில் சிதறிக்கிடந்தன. அதிகாலையில் பூஜை செய்வதற்காக ஆலய குருக்கள், கோயிலுக்குச் சென்ற போது இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதுடன் ஆலய நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ள வேளையில் இவ்வட்டார மக்களுக்கு அருள்பாலித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கோபுர கலசத்தில் ஏற்பட்டுள்ள மின்னல் தாக்குதலினால் கோபுரம் சற்று சாய்ந்துள்ளது. இது மக்களுக்கு வரவிருந்த ஆபத்தை அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் தற்காத்துள்ளார் என்று மக்கள் நம்புவதாக ஆலயத் தலைவர் எம்.நடராஜா கூறினார்.
மின்னல் தாக்கி சேதமுற்றள்ள இந்த 80 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆலயத்தைச் சீரமைப்பு செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக நடராஜா குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத்தை இடி தாக்கிய சம்பவம் காட்டுத் தீ போல பரவியுள்ளதால் சுற்று வட்டார மக்கள் இதனை பார்ப்பதற்கு வருகை தந்த வண்ணம் உள்ளன.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


