சிரம்பான், ஆகஸ்ட்.11-
நில விற்பனை வாயிலாக 38 லட்சம் ரிங்கிட்டைப் பெறுவதற்கு போலி தகவல்களை உள்ளடக்கிய நிலப்பட்டாவை பயன்படுத்தியதாகக் கூறப்படும் நில விற்பனை தரகருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தடுப்புக் காவல் அனுமதியை நீடித்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த தரகர், இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவலை நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றது.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.








