Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது
தற்போதைய செய்திகள்

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

Share:

குவாந்தான், பிப்ரவரி.25-

இஸ்லாமை அவமதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்மாணவர் புனித குர்ஆன் மீது கால் வைப்பது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, இன்று காலை குவாந்தானில் அவரைப் போலீசார் கைது செய்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

சமயத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், புனிதமாகக் கருதப்படும் ஒன்றை களங்கப்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 295 - இன் கீழ் இவ்வழக்கானது விசாரணை செய்யப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்