புத்ராஜெயா பிரசிண்ட் 5 பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் உயரமான தளத்தில் இருந்து கீழே விழுந்ததாகக் நம்பப்படும் 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 10.33 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்கு வந்த புற்றாஜெயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, சிறுமி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தார்.
இது குறித்து புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹமட் கூறுகையில், சிறுமி தனது குடும்பத்தினருடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இச்சம்பவம் தற்போது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








