Sep 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் எல். சிவநேசன் நியமனம்
தற்போதைய செய்திகள்

மலேசிய மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் எல். சிவநேசன் நியமனம்

Share:

மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்எவின் புதிய தலைவராக டாக்டர் எல். சிவநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசுவின் பதவிக்காலம் செப்டம்பர் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக எம்எம்எவின் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், எம்எம்எவின் கௌரவ துணைச் செயலாளராக இரண்டு தவணைகளும், 2023 முதல் 2024 -ஆம் ஆண்டு வரை எம்எம்எ தனியார் மருத்துவப் பயிற்சியாளர்கள் பிரிவுத் தலைவராகவும் டாக்டர் எல். சிவநேசன் பணியாற்றியுள்ளார்.

நேற்று இரவு ஈப்போவில் நடைபெற்ற எம்எம்எ 2026 இரவு விருந்தில் உரையாற்றிய அவர், மலேசியாவின் பொது சுகாதாரத் துறையில் மருத்துவர்களைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பதே தனது முக்கிய முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்ள புதிய மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது தீர்வாகாது என்றும், மருத்துவர்களின் பதவி உயர்வு, பணிச்சூழல், தொழில்முறை வளர்ச்சி மற்றும் நீண்டகால பணி வாய்ப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

அடுக்குமாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுமி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

அடுக்குமாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுமி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்