பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ததாக பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
28 வயது முஹமாட் அக்தார் ரம்சான் என்ற அந்த ஆடவர் கடந்த ஜுலை மாதம் 17 ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட மெடான் பெர்ஹெந்தியான் மேடான் கிட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 23 வயது லூனா ஈவ் வேகட் என்ற பிரஞ்சுப் பெண்ணை மானபங்கம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 354 ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் முகமட் அக்தார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன


