Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சரியான பாதையில் மலேசியா – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரியான பாதையில் மலேசியா – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், ஜூன்.22-

மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரி விதிப்பு , கட்டணங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சு மித்தி தெரிவித்துள்ளது. 90 நாள் காலக்கெடுவிற்குள் பேச்சுவார்த்தைகளை இறுதிச் செய்ய இருதரப்பும் விரும்புவதாக மித்தி தெளிவுபடுத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மலேசியாவின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க உதவும் என்றும், மலேசிய வணிகங்களுக்கு, குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மலேசியா அதன் சுற்று வட்டாரத்தில் ஒரு விருப்பமான முதலீட்டுத் தலமாக வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →