தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எஃப். பில் இலக்குக்கு உரிய மக்களுக்கான பணமீட்புத்திட்டத்தை அரசாங்கம் இனி அமல்படுத்த இயலாது என்று துணை நிதி அமைச்சர் டத்தோ செரி அஹ்மத் மஸ்லான் தெரிவித்துள்ளர்ர்.
இத்தயை பண மீட்புத் திட்டத்திற்கு பதிலாக, அடுத்த ஆண்டு முதல் சந்தாதாரர்களுக்கான நெகிழ்வான நிதி கணக்கு வசதி ஏற்படுத்தப்படும். இது இபி.எப். சந்தாதாரர்களுக்கான மூன்றாவது கணக்கு அல்லது நெகிழ்வான நிதி கணக்கு என்று அழைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்றாவது இபிஎப். கணக்கின் மூலமாக பி40, எம்40, தி20 என்று சந்தாதாரர்களின் பின்னணி எதனையும் பார்க்காமல், ஆபத்து அவசர வேளைகளில் உதவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
தற்போது இபிஎப். சந்தாதாரர்களுக்கு முதலாவது, இரண்டாவது என இரண்டு கணக்குகள் மட்டுமே உள்ளன. புதியதாக இந்த மூன்றாவது கணக்கில் சேர்க்கப்படும் தொகையின் மூலம் சந்தாதாரர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பொருளாதார சிரமங்களுக்கு, அவர்களின் சுமையை குறைப்பதற்கு மூன்றாவது கணக்கு உதவும் என்று டத்தோ மஸ்லான் தெளிவுபடுத்தினார்.








