May 24, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியாவில் கடைகள் திறக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியாவில் கடைகள் திறக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-

பாதாள சாக்கடையில் விழுந்த இந்திய மாதுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாதுவை தேடி கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக அந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடைபெறும் பட்சத்தில் வர்த்தகத் தளங்களை திறக்க வேண்டாம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளதாக வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளன.

இதில் மஸ்ஜிட் இந்தியாவில் முக்கிய வர்த்தகத் தளமான Malayan Mansion-னில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது இன்று காலையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related News