Sep 30, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் கெரோ அருகே காரினுள் ஆடவர் சடலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆயர் கெரோ அருகே காரினுள் ஆடவர் சடலம்

ஆயர் கெரோ, ஜனவரி.14-

ஆயர் கெரோ அருகே வாகன நிறுத்துமிடம் ஒன்றில், நேற்று செவ்வாய்க்கிழமை காரினுள் ஆடவர் சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நின்ற செடான் இரகக் காரில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், பொதுமக்கள் அது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், அச்சடலத்தை மீட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டஃபர் பாதிட் தெரிவித்துள்ளார்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த ஆடவர், 34 வயதுடைய உள்ளூர்வாசி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த வாகனத்திற்குள் எரிந்த கரித் துகள்களின் தடயங்களைக் கொண்ட, ஒரு கண்ணாடிப் பாத்திரமும் கண்டெடுக்கப்பட்டதாக கிரிஸ்டஃபர் பாதிட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலமானது மலாக்கா பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →