Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இலக்குரிய டீசல் உதவித்தொகை விண்ணப்பங்களை உடனுக்குடன் அங்கீகரிக்க அனுமதி
தற்போதைய செய்திகள்

இலக்குரிய டீசல் உதவித்தொகை விண்ணப்பங்களை உடனுக்குடன் அங்கீகரிக்க அனுமதி

Share:

இலக்குரிய டீசல் உதவித்தொகையை விண்ணப்பிக்கும் தகுதிப்பெற்றவர்களின் விண்ணப்பங்களை உடனுக்குடன் அங்கீகரிக்க உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்கை செலவின அமை‌ச்சக‌ம் அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எ‌ரிபொரு‌ள் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து fleed card - டுகளுக்கு விண்ணப்பிக்க ஒப்புதல் அனுமதி கடிதம் உடனுக்குடன் வழங்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமை‌ச்சர் Armizan Mohd Ali தெரிவித்தார்.

டீசல் உதவித்தொகையை பெறுவதற்கு தகுதிப்பெற்றுள்ள 33 வகையான வாகனங்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாக Armizan Mohd இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக, இலக்குரிய டீசல் உதவித்தொகையை பெறுவதற்கு தகுதிப்பெற்ற போக்குவரத்து நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட எ‌ரிபொரு‌ள் நிறுவனங்களிடமிருந்து fleed card - டுகளை பெறும் வரையில் டீசல் வாங்கியதற்கான ரசீதுகளை ஆதாரமாக பயன்படுத்தி தங்களின் செலவினங்களை திருப்பி செலுத்த விண்ணப்பிக்கலாம் என்று Armizan Mohd தகவல் அளித்தார்.

ஜூலை மாதம் முதல் அவர்களின் செலவினத்திற்கான உதவித்தொகை திரும்ப செலுத்தப்படும் என்பதுடன் டீசல் உதவித்தொகையை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களின் விண்ணப்பம் மற்றும் உதவித்தொகையை திரும்ப செலுத்துகின்ற நடைமுறைகளை குறித்து நிதி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில், 75, 541 நிறுவனங்களை சேர்ந்த 2 லட்சத்து 26 ஆயிரத்து 957 போக்குவரத்து வாகனங்கள் இலக்குரிய டீசல் உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதாக Armizan Mohd அறிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்