Nov 4, 2025
Thisaigal NewsYouTube
நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் பெற்றோருக்கு சம்மன்!
தற்போதைய செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் பெற்றோருக்கு சம்மன்!

Share:

அலோர் காஜா, நவம்பர்.04-

டுரியான் துங்காலில், நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி, 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில், அவரது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அலோர் காஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.

பஹாங், தெமெர்லோவைச் சேர்ந்த அந்த பெற்றோர் மற்றும் 7 குடும்பங்கள், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இரவு, தங்குமிடம் ஒன்றில் குடும்ப தினம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், அச்சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகின்றது.

இவ்வழக்கு, குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) - இன் கீழ், பெற்றோரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்துள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைமை துணை கண்காணிப்பாளர் அஸ்ருல் முகமட் தெரிவித்துள்ளார்.

Related News