Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வெகுமதி
தற்போதைய செய்திகள்

சுக்மா போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வெகுமதி

Share:

ஆகஸ்ட் 03-

2024 ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டியான SUKMA, வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு சரவாவில் நடைபெறவிருக்கிறது.

இந்த மலேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுகின்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மாநில அரசு சார்பில் தலா 10 ஆயிரம் வெள்ளி ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வழங்கப்பட்ட மூவாயிரத்து 500 வெள்ளிக்கு பதிலாக வெகுமதித் தொகை இம்முறை 5 ஆயிரம் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மாநில மந்திரி பெசார் Dato Amiruddin Shari தெரிவித்தார்.

Squash, Tennis, Badminton மற்றும் Sepak Takraw போன்ற 5 பேர் கொண்ட போட்டிகளில் தங்கப்பதக்கம் பெறுகின்ற அணியினருக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

அதேவேளையில் Rugby, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற குழு முறையிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுகின்ற குழுவினர் ஒவ்வொருவருக்கும் தலா மூவாயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SUKMA 2024 விளையாட்டுப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதிக்கும் வீரர்கள் மற்றும் வீரங்கனைகளை கொண்ட குழுவினரிடம் மாநில கொடியை ஒப்படைக்கும் நிகழ்வில் Amiruddin Shari இதனை தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது