Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

கோலாலம்பூர் மாநகரில் முக்கிய வர்த்தகத் தளமான மஸ்ஜிட் இந்தியா உட்பட மண் உள்வாங்கும் அபாயம் நிறைந்த பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புவியியல் அமைப்பு முறையை கண்காணிக்க சிறப்புக்குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று கெராக்கான் கட்சித் தலைவர்டத்தோ டாக்டர் டொமினிக் லா ஹோ சாய் சாய் கேட்டுக்கொண்டார்.

மஸ்ஜிட் இந்தியாவில் இந்திய நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தைப் போன்று மாநகரில் மண் உள்வாங்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இச்சம்பவங்கள் பேரிடராக மாறிவிடாமல் முன்கூட்டியே தடுப்பதற்கு பூவியியல் துறையில் பரந்த அனுபவத்தை கொண்டுவர்களை கொண்டு ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். மண்ணின் பாதுகாப்புத் தன்மை ஆராயப்பட வேண்டும் என்று டாக்டர் டொமினிக் லா கேட்டுக்கொண்டார்.

Related News