பத்து காஜா, நவம்பர்.22-
பத்து காஜாவில் சட்டவிரோதமாக நச்சுக் கழிவுகளை வீசியெறிந்து, 17 பசுக்களின் இறப்பிற்குக் காரணமானதாக நம்பப்படும் இரு நிறுவனங்களை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கெடா மற்றும் பினாங்கில் அமைந்துள்ள அந்த இரு நிறுவனங்களும், தங்களது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய நச்சுக் கழிவுகளைச் சட்டவிரோதமான முறையில் வீசியெறிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நச்சுக் கழிவுகள் வீசப்பட்ட அவ்விடத்தில் இருந்த புற்களை மேய்ந்த அந்த 17 பசுக்களும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பசுக்கள் இறந்ததால் அதன் கால்நடை வளர்ப்பாளருக்கு, கிட்டத்தட்ட 50,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, அப்பகுதியில் பெரிய மூட்டைகளில் 'அபாயக் குறியீட்டுடன்' வீசப்பட்டிருந்த அக்கழிவுகளில் கலந்துள்ள நச்சுத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








