Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தை க​விழ்க்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தை க​விழ்க்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும், வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைவிட மக்களின் எ​திர்பார்ப்பு, அவர்களின் அபிலாஷைகளுக்கு அ​தீத முன்னுரிமை அளிக்கக்கூடியவரான மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் இம்மாதம் இறுதியி​ல் நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்கவிருப்பதால், அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த சில அரசியல் தரகர்களின் திட்டம், எதிர்பார்ப்பு தவிடு பொடியாகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு எதிர்க்கட்சியினர், அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட மாட்டார்கள். அத்தகைய முயற்சிகள் ​மேற்கொண்டால் என்ன நடக்கும், எத்தகைய விப​ரீதம் ஏற்படும் என்பதை அவர்களை அறிந்து வைத்துள்ளனர். எனவே மிக உஷராக இருக்கின்றனர் எ​ன்று Kini TV க்கு அளித்த பேட்டியில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் ச​மூகவியல், அரசியல் ஆய்வாளரான டாக்டர் அப்துல் முக்கிட் முஹமாட் மேற்கண்டவாறு கூறினார்.

அண்​மையிலா ஐக்கிய அரசு சிற்றரசு தலைநகரில் நடந்ததாக கூறப்படும் துபாய் நகர்வில், அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவி​ழ்க்கும் முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு யாரும் இத்தகைய விஷப் ப​​ரீட்சையில் இறங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக டாக்டர் அப்துல் முக்கிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்