Sep 15, 2026
Thisaigal NewsYouTube
புஞ்சாக் ஆலமில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

புஞ்சாக் ஆலமில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

Share:

ஷா ஆலாம், பூஞ்சாக் ஆலமில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

ஜாலான் பெர்சியாரான் பூஞ்சாக் ஆலாம் 6-ல் சுமார் 0.3 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 6 தீயணைப்பு வீரர்கள், பிற்பகல் 3.45 மணியளவில் வெள்ள அபாயத்தைக் கண்காணித்தனர்.

சாலைகளில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போதிலும், குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

இதனிடையே, பூஞ்சாக் ஆலாமில் ஆலாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஜாலான் மேடான் பூஞ்சாக் ஆலம் உள்ளிட்ட சில சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News