Oct 9, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஆடவர் உயிர் தப்பினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஆடவர் உயிர் தப்பினார்

பட்டர்வொர்த், ஜூலை.01-

இன்று மாலை 5.40 மணியளவில் பட்டர்வொர்த், சுங்கை ஞியோர் தொடக்கப்பள்ளிக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிர் தப்பினார்.

ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் சென்ற அந்த நபரை அடையாளம் தெரியாத நபர், மிக அருகில் இருந்தவாறு துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனினும் அந்தத் தோட்டாக்கள், வாகனத்தின் டயர்களில் பாய்ந்துள்ளன.

40 வயது நபர், தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →