Oct 17, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ்காரர்கள் என்று கூறி, மோட்டார் சைக்கிள்கள் களவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ்காரர்கள் என்று கூறி, மோட்டார் சைக்கிள்கள் களவு

பெட்டாலிங்ஜெயா, நவ.7-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு, மோட்டார் சைக்கிள்களை களவாடிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பத்து நபர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் டத்தோ எஸ். சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கைபூலோ மேம்பால உணவக ஓய்வுத்தளத்திற்கு அருகில் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு நால்வர் தங்களிடம் கொள்ளையிட்டதாக 18 மற்றும் 21 வயதுடைய இரு நபர்கள் போலீசில் புகார் செய்து இருப்பதாக டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

பின்னிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகளை இலக்காக கொண்டு சம்பந்தப்பட்ட கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

போலீஸ்காரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மோட்டார் சைக்கிளோட்டிகளை தடுத்து நிறுத்தி, சாவியை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளை சோதனையிடப்போவதாக கூறிக்கொண்டு, இந்தக் கொள்ளைக்கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளன என்று பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளக்ள் கூட்டத்தில் டத்தோ சசிகலா தேவி இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →