Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நம்பிக்கை குழுமத்தின்நம்பிக்கை நட்சத்திர விருதுகள் - நம்பிக்கை வர்த்தக விருதுகள்
தற்போதைய செய்திகள்

நம்பிக்கை குழுமத்தின்நம்பிக்கை நட்சத்திர விருதுகள் - நம்பிக்கை வர்த்தக விருதுகள்

Share:

எதிர்வரும் அக்டோபர் 26, 27 ஆம் தேதிகளில் நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நம்பிக்கை நட்சத்திர விருதுகள், நம்பிக்கை வர்த்தக விருதுகள் ஆகிய இரு விருது நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கோலாலம்பூர், பேங்க் ராக்யாட்டில் இருக்கும், டேவான் துன் ரசாக்கில் நடைபெற உள்ள இந்த விருதளிப்பு நிகழ்ச்சிகளில் கலைத்துறை, வர்த்தகத் துறை சார்ந்த ஜாம்பவாங்களுக்கும் வளர்ந்து வரும் இளம் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்படும் என நம்பிக்கைக் குழுமத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ தெரிவித்தார்.

இரண்டாவது முறை நடக்கவிருக்கும் இந்த விருது நிகழ்ச்சிகளில் சமூதாயத்திற்குப் பாடாற்றிய சமூக ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டு மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருப்பதாகவும் இன்று காலை கோலாலம்பூர் பசிபிக் ரீஜன்சி தங்கும் விடுதியில் நடந்த நம்பிக்கை விருதுகள் அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

Related News