Aug 25, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா 2026 வெற்றி: செப்டம்பர் 1-ஆம் தேதி சிலாங்கூரில் சிறப்பு விடுமுறை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுக்மா 2026 வெற்றி: செப்டம்பர் 1-ஆம் தேதி சிலாங்கூரில் சிறப்பு விடுமுறை அறிவிப்பு

Share:

2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிலாங்கூர் மாநிலம் வென்றதை கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 1 சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி, நேற்று இரவு அனேகா வால்க், எஸ்.ஏ. சென்ட்ரல்-ல் நடைபெற்ற போட்டியின் நிறைவு விழாவில் இதனை அறிவித்தார்.

இப்போட்டியில் மொத்தம் 468 விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், சிலாங்கூர் அணி 101 தங்கம், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த சாதனைக்காக சிலாங்கூர் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி அதிகாரிகள் மற்றும் போட்டி முழுவதும் பணியாற்றிய 10,000 தன்னார்வலர்களுக்கு மாநில அரசின் நன்றியை தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 1 சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமீருடின் தெரிவித்தார்.

நிறைவு விழாவில் சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராஃபுதீன் இத்ரீஸ் ஷா, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபீக் ஜோஹாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் அணியின் இந்த வெற்றி, வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என அமீருடின் ஷாரி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Related News