கூச்சிங், ஆகஸ்ட்.23
அனைத்துத் துறைகளிலும் ஒரு நிபுணத்துவம் நிறைந்த மாநிலமாக சரவாக்கை முன்னெடுக்கும் நோக்கில் நிபுணத்துவ தொழில்துறையைச் சேர்ந்த ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு சரவாக் மாநில அரசாங்கம் 5 ஆண்டு கால வேலை பெர்மிட் விசாவை வழங்கவிருக்கிறது.
நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள் மூலம் சரவாக்கை மேம்படுத்தும் முயற்சியாக ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு வேலை பெர்மிட் விசாவை 5 ஆண்டுகளாக நீட்டிக்கவிருக்கிறது என்று மாநில துணைச் செயலாளர் அப்துல்லா ஸைடேல் அறிவித்துள்ளார்.








