Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சபா மாநில புதிய ஆளுநர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சபா மாநில புதிய ஆளுநர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்

கோத்தாகினபாலு, டிச. 14-


சபா மாநில ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் பதவி தவணைக்காலம், இம்மாதம் இறுதியில் நிறைவுபெறுவதையொட்டி அந்த மாநிலத்தின் புதிய ஆளுநர் பெயர், அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா புதிய ஆளுநருக்கான பதவி நியமனக்கடித ஒப்படைப்பு சடங்கு அடுத்த வாரம் டிசம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருப்பதாக ஓரியெண்டல் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி சபா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட துன் துன் ஜுஹார் மஹிருடின் சபா மாநிலத்தில் சேவையாற்றிய நீண்ட கால ஆளுநர் என்ற வரலாற்றுக்குறிப்பைக் கொண்டுள்ளார்.

சபாவில் அம்னோவை வேரூன்றச் செய்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான துன் ஜுஹார், சபா சட்டமன்ற சபா நாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சபா மாநில புதிய ஆளுநர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் | Thisaigal News