சிப்பாங், ஆகஸ்ட்.08-
சிப்பாங், புத்ரா பெர்டானாவில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையன் நடத்திய தாக்குதலில் 12 வயது சிறுமி காயமுற்றார்.
நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொள்ளையன், கத்தியை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளான் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜிகே ஷான் கோபால் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை நேற்று மாலை 5.03 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முகம், கழுத்து தலை ஆகிய பகுதிகளில் காயங்களுக்கு ஆளான அந்தச் சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜிகே ஷான் கோபால் குறிப்பிட்டார்.








