May 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

Share:

கடந்த மாதம் ஜார்ஜ்டவுனில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் வலது கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர், இன்று ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

29 வயது ஜி.கிஷன், 26 வயது எஸ்.யோகயோகன், 28 வயது எஸ். ஹேகனேஸ்வரன் மற்றும் 23 வயது கே. சர்விந்திரன் ஆகியோர் நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், ஜார்ஜ்டவுனில் உள்ள கார்னி பாரகன் பகுதியில் 33 வயதான எஸ். பிரஷன்ராஜ் என்பவரை பட்டாக்கத்தியால் தாக்கி, அவருக்குக் கடும் காயம் விளைவித்ததாக இந்த நால்வரும் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரிம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

ஜ.கிஷன், யோகயோகன், ஹேகனேஸ்வரன் மற்றும் சர்விந்திரன் ஆகிய நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அனைவரும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டி... | Thisaigal News