கோலாலம்பூர், ஜூலை.27-
கோலாலம்பூர் செராஸ் பகுதியிலும், சரவாக் மிரியிலும் இன்று காலை 10.30 நிலவரப்படி காற்றின் தரம் 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது. செராஸில் 131 ஆகவும், மிரியில் 124 ஆகவும் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது. இந்தப் புகை மூட்டம் இந்தோனேசியாவிலிருந்து மேற்கு கடற்கரை பகுதிக்குள் நுழைந்ததால் ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.








